மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழாவினை முன்னிட்டு மொரட்டாண்டி , பாப்பாஞ்சாவடி, பூத்துறை ,காட்ராம்பாக்கம் மற்றும் கொடூர் கிராமங்களில் அன்னதானம் வழங்கியும் அப்பகுதியில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வானூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினாராக மக்கள் நீதி கட்சியின் மாநில செயலாளர் டாக்டர் . வைத்தீஸ்வரன் மற்றும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஷாஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் மொரட்டாண்டி கட்சி நிர்வாகிகள் டோலி , பிரகாஷ் , தமிழ் , மதன் , அருள் , பூத்துறை கட்சி நிர்வாகிகள் தமிழ்மாறன் , மதுரகவி , பாப்பாஞ்சாவடி கட்சி நிர்வாகிகள் தமிழ் , வசந்த் மற்றும் கொடுரை சேர்ந்த முத்து , காட்ராம்பாக்கம் பாலு மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் .
புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழா